TNTET 2025: ஆசிரியர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; மார்ச் 6 - 9ல் டெட் மாநில தகுதித் தேர்வு!  

TNTET 2025 Exam: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

Continues below advertisement

ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு மார்ச் 6, 7, 8, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அமைச்சர் கோ.வி.செழியன் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னால், அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பில் கூடுதல் தகவல்களைப் பெறலாம். 

மாநிலம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாநில அளவிலான தகுதித் தேர்வை மாநில பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றன. 

2 ஆண்டுகளாக நடைபெறாத தேர்வு

ஆண்டுதோறும் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டிய நிலையில், கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்​தப்​பட்​டது. அதன்​பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்லை.

அந்த வகையில் இந்த ஆண்டு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

எப்போது தேர்வு?

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிக்கையில் 2024 ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் தேர்வு நடத்தப்படவில்லை. 

தொடர்ந்து 8 மாதங்கள் கழித்து தற்போது தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ கோவி. செழியன் கூறும்போது, ’’மாநில தகுதித்‌ தேர்வினை (செட்) தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன்‌ தொடர்ச்சியாக, மாநில தகுதித்‌ தேர்வினை வருகின்ற மார்ச்‌ மாதம்‌ 6, 7, 8 மற்றும்‌ 9 ஆகிய தேதிகளில்‌ கணினி வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

நுழைவுச் சீட்டு எப்போது?

தேர்வுக்கான நுழைவுச்‌ சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ https://www.trb.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியில்‌, தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

Continues below advertisement
Sponsored Links by Taboola