தமிழக ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சித்துறையின்  கீழ் குறைகேள் அதிகாரியாக (Ombudsman) பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கிராமப்புற மக்களின் பங்கேற்போடு சமூக, பொருளாதாரத்தில் வளர்ச்சியை மேம்படுத்துவதே ஊரக மற்றும் உள்ளாட்சித்துறையின் நோக்கமாகும்.  இதன் மூலம் கிராமத்தின் அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் மக்கள் பெற்றுவருகின்றனர். குறிப்பாக  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டமுமான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில்தான் இத்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக (Ombudsman)  பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.





இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் எனவும், 68 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது. எனவே மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள், ஆப்லைன் மூலமாக  Direct of rural devolpment  and panjat raj, saidapet, panagal building,  Chennai – 600015 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியில் சேர விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.


இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. முதல் ஒராண்டில் அவர்கள் மேற்கொள்ளும் பணியினைப்பொறுத்தே தொடர்ந்து அடுத்த ஆண்டு பணிபுரிவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. இதோடு உங்கள் பணியில் திருப்பி இல்லாதப்பட்சத்தில், உடனடியாக இப்பணியிலிருந்து வெளியே அனுப்புவதற்கான நடைமுறைகளும் இதில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேலும் இப்பணியில் சேர விரும்புவோர், 10 ஆண்டுகளாவது மக்களுடன் தொடர்பில் இருந்த பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். எந்த வித அரசியல் கட்சியிலும் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புள் இருக்க கூடாது. விண்ணப்பிக்கும் நபர்கள் நல்ல உடல் தகுதியோடு இருக்க வேண்டும். அதோடு மக்களை ஒருங்கிணைத்து ஏதாவது அரசு அலுவலகங்களுக்கு செல்வது, ஊரக வளர்ச்சி பணிகள் குறித்து கிராமங்களில் ஆய்வு செய்வது போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இதுப்போன்ற பல்வேறு தகுதிகளைக்கொண்டவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து கூடுதல் விபரங்களை https://tnrd.gov.in/pdf/EOI31082021.pdf என்ற பக்கத்தில் அறிந்துக்கொள்ளலாம்.