டிஎன்பிஎஸ்சி அமைப்பில் கேமரா பதிவு நடைமுறை எப்போதும் நிறுத்தப்படவில்லை என்று அதன் உறுப்பினர் விளக்கம் அளித்துள்ளார். 

Continues below advertisement

அண்மையில் தனியார் ஊடகவியலாளர் ஒருவர், டிஎன்பிஎஸ்சியின் செயல்பாடுகள் குறித்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் வீடுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் வினாத் தாள்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்து இருந்தார். கட்சிக்காரர்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக நியமனம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

வீடியோ பதிவு முறை ஒழிப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி நட்ராஜ் நியமிக்கப்பட்டு, செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பிறகே, அந்த அமைப்பில் வெளிப்படைத் தன்மை ஏற்பட்டதாகவும் அவர் கூறி இருந்தார். அப்போது நேர்காணல் வரை வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது மீண்டும் அந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்து இருந்தார்.

Continues below advertisement

அதற்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது:

’’நீங்கள் TNPSC பற்றி கூறியுள்ள முதல் பகுதியில் சிறு தகவல் மட்டுமே உண்மை. ஆனால் அது இப்போது கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தவறு. அது இன்று வரை, இனிமேல் என்றுமே, கடைப்பிடிக்கப்படும் என்பதே உண்மை.

இரண்டாம் பகுதி முற்றிலும் தவறானது. இண்டர்வியூ கேமரா பதிவு நடைமுறைக்கு வந்ததில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. கேமரா பதிவு நடைமுறை எப்போதும் நிறுத்தப்படவில்லை.

மாஸ்க்கிங் சிஸ்டம் நடைமுறை

அது மட்டுமின்றி, இரண்டாண்டுகளுக்கு முன்பு கேமரா பதிவு செய்யப்படுவதோடு, இன்னும் அதிக வெளிப்படைத் தன்மையை (Transparency) நிலைநாட்ட மாஸ்க்கிங் (Masking) சிஸ்டம் பயன்பாட்டில் உள்ளது.

இண்டர்வியூ வருபவரின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் மாஸ்க்கிங் செய்யப்பட்டு, டம்மி எண்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதை தேர்வர்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தனித்துவமான முயற்சி. மற்ற மாநிலங்கள் வியந்து அறிந்து கொள்ள விரும்பும் அம்சம். மேலும், கவுன்சிலிங் முறை பணியமர்வு வரை வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

சில யூடிபர்களைப்போல கற்பனைகளோடு பொய்யை கலப்பது மிகவும் ஆபத்தானது. இன்டர்வியூவில் கலந்து கொண்ட ஒருவரை நீங்கள் கேட்டிருந்தீர்களென்றாலே உண்மை தெரிந்திருக்கும். உங்கள் சாணக்கியத்தனம் உண்மையை உரக்கச் சொல்லட்டும்’’.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் பதில் அளித்துள்ளார்.