ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை), 2026 ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரக துறையில் உள்ள வளர்ச்சி மற்றும் ஊராட்சித் பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுலவர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (07.07.2026) வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 17 முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்வர்கள் 17.07.2026 முதல் 15.08.2026 வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.
இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 15 இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்களை ஆகஸ்ட் 19 முதல் 21ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
OMR/ கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தாள் 1
தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு
தாள் 2
வேளாண்மை, தானியங்கி மற்றும் இயந்திர பொறியியல், அமைப்பியல் பொறியியல், அமைப்பியல் பொறியியல் மற்றும் கட்டடக் கலையியல்
தேர்வுக் கட்டணம்
தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள் எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டணமாக ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்) இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது செலுத்த வேண்டும்.
தேர்வர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் போது கூடுதலாக தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பாடத்தாளுக்கும் ரூ.100 கூடுதலாக கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் தேர்வர்கள் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட பாடத்தாள்களை திரும்ப பெறும் பட்சத்தில் ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
இதுகுறித்த விரிவான அறிவிக்கையை https://tnpsc.gov.in/document/tamil/CTS%20-%20Diploma-(Tamil).pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
