TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

குரூப் 2 முதன்மைத் தேர்வில் முக்கிய மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஓஎம்ஆர் முறையி, தேர்வு நடைபெற உள்ளது. 

Continues below advertisement

முன்னதாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 7,93,966 தேர்வர்களில்‌ 5,83,467 தேர்வர்கள்‌ தேர்வு எழுதினர்‌. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகின. இந்த நிலையில், தேர்வு பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன்படி, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8 மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள், பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேறு என்ன மாற்றங்கள்?

தொடர்ந்து தேர்வு மையங்களும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.


அதேபோல குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள் தேர்வு முறையிலும் மாற்றங்கள் நடைபெற உள்ளன. ஓஎம்ஆர் முறையில் (Optical Mark Recognition), இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளனர். இவற்றுக்காக 21,822 பேர் முதன்மைப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.

இந்த விவரங்களை https://tnpsc.gov.in/Document/English/ADDENDUM_8C.pdf என்ற இணைப்பில் விரிவாகக் காணலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: tnpsc.gov.in

Continues below advertisement
Sponsored Links by Taboola