தேர்வு மையங்களில் தேர்வர்கள் இனி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், பணி நியமனங்களும் தேர்வுகளும் முறையாக நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராகப் பொறுப்பேற்றார்.


சொன்ன தேதிக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள்


அப்போதில் இருந்தே ஆணையத்தில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதிகளிலும் அதற்கு முன்னதாகவும் வெளியாகின.


தொடர்ந்து தேர்வில் தேர்வு செய்யப்பட்டோரின் பதிவு எண், சாதி, பெயர் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி தளத்தில் அனைவரும் பார்க்கும்படியாக பதிவேற்றம் செய்யப்பட்டன.


சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு


இந்த நிலையில், தற்போது தேர்வு மையங்களில் தேர்வர்கள் இனி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.






அதேபோல புகைத்துவிட்டு வருவது, போதைப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு வருவது ஆகிய செயல்களில் தேர்வர்கள் ஈடுபட்டால், அவர்களின் தேர்வுத்தாள் செல்லாதது ஆக்கப்படும் என்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்வு எழுதவே தடை விதிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.




மின்னணு உபகரணங்களுக்கும் தடை


அதேபோல் மொபைல் போன், புளூடூத் டிவைஸ், மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் எடுத்துவரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதையும் வாசிக்கலாம்: Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?