குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிமாநிலத்தவர் அதிக அளவில் அரசு வேலைகளில் இணைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின்கீழ், அரசு வேலையில் சேரத் தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. அண்மையில் இதற்கான அரசாணை வெளியானது. 


அதில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) ஆகிய துறைசார் தேர்வு முகமைகளில் தேர்வாக தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையே அண்மையில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையான கட்டாயத் தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம்  மற்றும் மாதிரி வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 10-ம் வகுப்புக்கான தரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளைத் தேர்வுக்கு தயாராகுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. 




இந்நிலையில் இன்று குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


அறிவிக்கப்பட்டபடி குரூப்-4 தேர்வில் ஏற்கெனவே இருந்த பொது ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டுள்ளது.  தமிழ் மொழிப்பாடத்தில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தமிழ் பாடம் ஒருசேர தகுதித் தேர்வாகவும், மதிப்பீட்டுத் தேர்வாகவும் இருக்கும். அதாவது தேர்ச்சிக்குத் தமிழ் மொழித் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இதில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும். 


ஏற்கனவே இருந்த பொது அறிவு பகுதியில் தமிழக வரலாறு, பண்பாடு, வளர்ச்சி, நிர்வாகம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


திருத்தி அமைக்கப்பட்ட  குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்ய https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27122021.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


TN Govt Jobs | தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தாலே அரசுப்பணியா?அரசாணை சொல்வது என்ன? முழு விவரம்!