குரூப்-4 பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் விவரங்களை ஜனவரி 8-ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி.-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது.


இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வெளியாகி இருந்தால் அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்வு முடிவுகள் தாமதமாகின. எனினும் காலிப் பணியிடங்கள் 10,117 ஆக உயர்த்தப்பட்டன. 


2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. கலந்தாய்வு தொடங்கத் தாமதமான நிலையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலந்தாய்வு நடைபெற்றது. 


இதற்கிடையே கொரோனா காலத்தில் தாமதமாக தேர்வு நடைபெற்றதால், காலிப் பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.


மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா, முத்துலட்சுமி உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்"  டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேர்வில் நாங்களும் பங்கேற்றோம். தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் எங்களுக்கு 255 மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.


குரூப்-4 தேர்வில் விடைத்தாள் மோசடி நடைபெற்றுள்ளது. இதனால் எங்களுடைய விடைத்தாள் நகல் கேட்டு. உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் உத்தரவிட்டதால், எங்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதை ஆய்வுசெய்தபோது, நாங்கள் அதிககேள்விகளுக்குப் பதிலளித்துள் ளோம். பணிக்கு தேர்வாகும் அளவுக்கு எங்களுக்கு மதிப்பெண் வருகிறது. இருப்பினும், எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. எனவே, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, எங்களது விடைத்தாளையும், இறுதி விடைப்பட்டியலையும் ஒப்பிட்டு சரியான மதிப்பெண் வழங்கவும், எங்களுக்கு குரூப்-4 பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும்." என்று தெரிவித்துள்ளனர்.


 இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி. தரப்பில், மனுதாரர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி, குரூப்-4பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜனவரி 8-ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தவிட்டுள்ளார். மேலும், மனுதாரர்களைக் காட்டிலும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வானவர்கள் பட்டியலில் இருந்தால், மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடலாம். மனு முடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் வாசிக்க..


இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக்? அவரே சொன்ன விளக்கம்!


Rohit Sharma: ’ரசிகர்களின் அன்புக்கு நன்றி; இனி நடக்கப்போவது இதுதான்’ - மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா!