தமிழகத்தில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு வேலை கிடைக்காதவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. அதாவது பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசு வேலைதான் வேண்டும் என உறுதியாக உள்ள இளைஞர்களுக்கும் மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசு பணியிடங்களில் சேர்வதற்கான இலவச பயிற்சியை தமிழக அரசு வழங்கி வருகிறது.
குரூப்-4 தேர்வு
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,574 இடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க நவம்பர் 5ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
இலவச பயிற்சி வகுப்புகள்
அதாவது ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் அரக்கோணம் அறிவுசார் மையம் ஆகியவை சார்பில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம் (தலைமை தபால் நிலையம் அருகில்) என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது deoranipet.studycircle@gmail.com-என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
போட்டி தேர்வு
மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
