பள்ளிகளிலும் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கடந்த ஜூலை 4, 5-ம் தேதிகளில் தாள்-1, தாள்-2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த 2 தேர்வுகளையும் சேர்த்து 2,17,519 ஆசிரியர்கள் எழுதிய நிலையில் 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 1,09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் 80 சதவீதமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் 38 சதவீதமாகவும் பதிவானது.

Continues below advertisement

ஆசிரியர் தகுதித் தேர்வு

இதில் 50.66 சதவீதம் பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலனுக்காக வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி மீண்டும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் 2-ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Continues below advertisement

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவி பெறும் /அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (SPECIAL TNTET -2) (தாள் - I மற்றும் தாள் - II) நடத்துவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்  (Website: http://www.trb.tn.gov.in) நேற்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து பணிபுரிந்து வர வேண்டும். 

கால அவகாசம் 

இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க இன்று முதல் நவம்பர் 19 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.