துணை வரி வருவாய் அலுவலர், வன அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களும் தர வரிசையும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுக்கு 7,93,967 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 7,93,966 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2,10,499 பேர் குரூப் 2 தேர்வை எழுதவில்லை. மொத்தம் 5,83,467 பேர், 537 காலி இடங்களை நிரப்பத் தேர்வை எழுதினர். முன்னதாக இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்று இருந்தன.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்று, 53 பணி நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
தேர்வர்கள், https://tnpsc.gov.in/results/grp2int/index.aspx?key=Ikwowr$wko032Awd1F32s2 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், பதிவு எண், பிறந்த தேதி, கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.