ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டுவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையோர பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தியது. இதில் பெரும்பாலான தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தனர். ஆனாலும் சில இடங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் சில இடங்களில் சேதங்கள் ஏற்ப்பட்டது.
ராஜ்நாத் சிங் பார்வையிடல்:
நிலைமையை நேரில் பார்வையிட ஸ்ரீநகருக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளையும் ஆய்வு செய்தார். பாதாமி பாக் கண்டோன்மென்ட்டில் சில கட்டிட இடிப்பாடுகளையும் அவர் பார்வையிட்டார். கண்டோன்மென்ட்டில் உள்ள வீரர்களிடம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "வீரர்களின் தியாகத்திற்கும், பஹல்காமில் பொதுமக்களின் நினைவிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
"சிந்தூர் நடவடிக்கையின் போது நீங்கள் செய்தவற்றிற்காக நாடு பெருமை கொள்கிறது. இந்திய குடிமகனாக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
ஆயுதப்படைகள் பாராட்டத்தக்க உணர்வுடன் செயல்பட்டு, எதிரிகளின் மறைவிடங்களை துல்லியமாகவும், நிதானத்துடனும் அழித்ததாக அவர் கூறினார்.
'பாகிஸ்தான் இந்தியாவை ஏமாற்றிவிட்டது'
பாகிஸ்தான் இந்தியாவை "ஏமாற்றிவிட்டது" என்றும் அதற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் சிங் கூறினார். "பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்தால், அது விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். எல்லைக்கு அப்பால் இருந்து எந்த புனிதமற்ற செயலும் செய்யப்படாது என்ற உண்மையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. இது நடந்தால், விஷயம் வெகுதூரம் செல்லும்," என்று அவர் கூறினார்.
"பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது. பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை விரும்பினால், முதலில் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி விவாதிக்க வேண்டும்," என்று அவர் பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை அழுத்தமாக மீண்டும் தெரிவித்தார். பாகிஸ்தானை "பொறுப்பற்ற நாடு" என்று அழைத்த சிங், " பயங்கரவாதிகள் எங்கும் தங்களைப் பாதுகாப்பாகக் கருதக்கூடாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டுகிறது. அவர்கள் எப்போதும் இந்திய இராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் அணு ஆயுத அச்சுறுத்தலைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை" என்றார்.
இன்று, ஸ்ரீநகரிலிருந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு முன் இந்தக் கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பானதா? பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்