TNPSC Group 2 Exam: டி.என்.பி.எஸ்.சி.,  நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் மூலம், 2,327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


குரூப் 2, 2ஏ தேர்வு:


தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ரண்டாயிரத்து 327 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதே நேரம், இந்த தேர்வில் பங்கேற்ற  7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்காக தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 2,763 தேர்வு மையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தேர்வறக்கு குறிப்பிட்ட பொருட்களை கொண்டு செல்ல  தடை விதிக்கப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறினால் விடைத் தாள் செல்லாதது ஆக்கப்படும் மற்றும் தேர்வர்களுக்கு தேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.


9 மணி வரை மட்டுமே அனுமதி:


விண்ணப்பதாரர்கள் தேர்வு நடபெறும் அறைக்கு  09.00 மணிக்கு முன்னரே சென்று விட வேண்டும். 09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள். தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாறாக வேறெந்த ஆவணமும் அனுமதிக்கப்படாது 


எந்தெந்த பொருட்களுக்கு தடை:


* P&G டிசைன் டேட்டா புத்தகம்,


* கணினி மற்றும் வரைதல் உபகரணங்கள்,


* லாக் டேபிள்கள்,


* மேப் நகல்கள்,


* புத்தகங்கள்,


* நோட்டுகள்,


* குறிப்புகள்,


* வழிகாட்டிகள்,


* கைப்பைகள்,


* ரஃப் ஷீட்டுகள்,


* காகிதத் தாள்கள்,


* இதர அனுமதிக்கப்படாத பொருட்கள் போன்ற எலக்ட்ரானிக் அல்லாத சாதனங்களையும் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


தேர்வர்கள் செய்யக் கூடாதவை:



  • மற்ற தேர்வர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது

  • மற்ற தேர்வர்களிடம் இருந்து நகலெடுத்தல்

  • மற்றவர்களின் விடைத் தாளில் இருந்து நகலெடுக்க அனுமதித்தல்

  • அச்சிடப்பட்ட / தட்டச்சு செய்யப்பட்ட / கையால் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லது குறிப்புகளில் இருந்து நகலெடுத்தல்

  • தேர்வு அறையில் இருந்து, பயன்படுத்திய / பயன்படுத்தப்படாத OMR விடைத்தாளின் முழு அல்லது பகுதியை, அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் செல்லுதல்

  • ஓஎம்ஆர் விடைத் தாளில் அச்சிடப்பட்ட பார்கோடு மற்றும்/ அல்லது ஓஎம்ஆர் டிராக்கை சேதப்படுத்துதல் ஆகியவற்றை செய்யக் கூடாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.