தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், முழு நேர விடுதி காப்பாளர், முழுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வுகள் நடைபெற உள்ளன.

Continues below advertisement

இதில் நேர்முகத் தேர்வில் 116 இடங்கள், நேர்முகத் தேர்வு அல்லாத இடங்களுக்கு 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வானது வருகின்ற மே மாதம் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்ப தேதி நேற்று இரவு 12 மணி வரை நிறைவடைந்தது. 

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல், ஆவணங்கள் சரிபார்ப்பு என 4 நிலைகளில் நடைபெறுகின்றன. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

Continues below advertisement

இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி (23ம் தேதி) நேற்றுடன் முடிவடைந்தநிலையில், நேற்று இரவு 12 மணிவரை 11.61 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

முதல்நிலைத் தேர்வு 

முதல்நிலைத் தேர்வு மே 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் 20 நகரங்களில் நடைபெறும். 

முதல்நிலைத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பொதுத்தமிழ் அல்லது பொதுத்தமிழ் ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு இரண்டும் சேர்த்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 

முதன்மைத் தேர்வு :

முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாகப் பிரித்து நடத்தப்படும். முதல் தாளில், பத்தாம் வகுப்புத் தரத்தில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வு நடத்தப்படும். 3 மணி நேரத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதன் மதிப்பெண்கள் தரவரிசையில் கணக்கில் கொள்ளப்படாது. எனினும் தாள் 1-ல் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 திருத்தப்படும்.

இரண்டாவது தாளில், பொது அறிவு பகுதியில் இருந்து 3 மணி நேரத்துக்கு 300 கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்.