TNPSC Group 2 Result 2024: குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- காண்பது எப்படி?

நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/finalresult/03_2022_STENO_TYPIST_PHASE_1_SEL.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து குரூப் 2 தேர்வு முடிவுகளைக் காணலாம்.

Continues below advertisement

2022-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மொத்தம் 383 பேர் குரூப் 2 ஏ தனி எழுத்தர், ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குரூப் 2 தேர்வு நடந்தது எப்போது?

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு, அதாவது 2023 பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு வெளியாகின. இதில் நேர்முகத் தேர்வு அல்லாதோருக்கும் நேர்முகத் தேர்வு கொண்டோருக்கும் தனித்தனியாகத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி தனியாக வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களை https://www.tnpsc.gov.in/document/finalresult/03_2022_GROUP_IIA_SERVICES_PHASE_123_SEL.pdf என்ற இணைப்பில் காணலாம்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola