2024ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்து பெறுவது எப்படி என்று பார்க்கலாம். தேர்வர்கள் https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


பணி விவரம்


குரூப் 2 பிரிவு



  • உதவி இன்ஸ்பெக்டர் 

  • உதவி கமர்சியல் வரி அதிகாரி 

  • ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி 

  • Probation Officer

  • Sub Registrar, Grade-II

  • சிறப்பு உதவியாளர் 

  • சிறப்பு பிரிவு உதவியாளர் 

  • சிறப்பு பிரிவு உதவியாளர்

  • சிறப்பு செக்சன் அதிகாரி 

  • சிறப்பு அதிகாரி - ப்ரோக்ராமர்

  • Forester

  • Forester


குரூப் 2ஏ பிரிவு 



  • தனிப்பிரிவு உதவியாளர் 

  • Residential Warden

  • Audit Inspector

  • Assistant Inspector

  • Handloom Inspector

  • Supervisor / Junior
    Superintendent

  • உதவியாளர் (ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் வரித்துறை அலுவலக பிரிவு)

  • Revenue Assistant

  • இத்தோடு தமிழ்நாடு அமைச்சகங்களில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 


மொத்த பணியிடங்கள் - 2030


2030 காலிப் பணியிடங்கள்


குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  அதன்படி, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன. தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளெர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம்


இதனிடையே, TNPSC Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வழக்கம்போல குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விவரித்து எழுதும் வகையில் டிஸ்கிரிப்டிவ் முறையில் நடத்தப்பட உள்ளது. அதேநேரத்தில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு, அப்ஜெக்டிவ் (கொள்குறி) முறையில் நடத்தப்பட உள்ளது. எனினும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில் பின்பற்றப்படும் தமிழ் தகுதித் தேர்வு (Tamil Eligibility Test) மட்டும் விரித்து எழுதும் வகையில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்கு 7.93 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. 


ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?


தேர்வர்கள்  https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பில் க்ளிக் செய்ய வேண்டும். 


போதிய விவரங்களை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பெறலாம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/