டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ஒன்றாக இணைக்கப்பட்டு நடத்தப்பட்டது பல்வேறு சிரமங்களுக்கு வித்திட்டதாகத் தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி முன்னெடுத்திருக்கிறது. என்னென்ன மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்திருக்கிறது? பார்க்கலாம்.


குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. இதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.  


குரூப் 4 தேர்வுகள், 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகின்றன. அதேபோல, குரூப் 1 தேர்வு 90 காலி இடங்களை நிரப்ப, ஜூலை 13ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு (நேர்காணல் பணியிடங்கள்), ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.


2030 பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 28ஆம் தேதி இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.


Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம்


இந்த நிலையில், TNPSC Group 2, 2 ஏ தேர்வில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் குரூப் 2 தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. Group 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் ஒன்றாக இணைத்து நடத்தப்பட உள்ளன.


எனினும் முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும். அதேநேரத்தில் வழக்கம்போல குரூப் 2 மெயின்ஸ் தேர்வு விவரித்து எழுதும் வகையில் டிஸ்கிரிப்டிவ் முறையில் நடத்தப்படும். அதேநேரத்தில் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு, அப்ஜெக்டிவ் (கொள்குறி) முறையில் நடத்தப்பட உள்ளது. எனினும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில் பின்பற்றப்படும் தமிழ் தகுதித் தேர்வு (Tamil Eligibility Test) மட்டும் விரித்து எழுதும் வகையில் நடைபெற உள்ளது.


மிக அதிகமான பணியிடங்கள்


Aptitude & Mental Ability தேர்வுக்குப் பதிலாக Reasoning and General Intelligence தேர்வு நடைபெற உள்ளது.  Group 2, 2 ஏ தேர்வுக்கு மொத்தம் 2030 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக குரூப் 4 தேர்வுக்குப் பிறகு மிக அதிகமான பணியிடங்கள் குரூப் 2 தேர்வில்தான் இருக்கும். அந்த வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குரூப் 4 தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் குரூப்  2 ஏ தேர்விலும் கலந்துகொண்டு, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.


திருத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை குறித்த முழுமையான தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/static_pdf/annualplanner/Annual%20Planner_2024_Revised.pdf  என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்து காணலாம்.