TNPSC Group 1 Result: தேர்வர்களே.. வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்; இதோ ரேங்க் லிஸ்ட்- காண்பது எப்படி?

TNPSC Group 1 Result 2025: குரூப் 1 இறுதித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/RL_G1_04_2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலைக் காணலாம். 188 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

டிசம்பர் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் குரூப் 1 தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

குரூப் 1 தேர்வு இருப்பதிலேயே மதிப்பும் ஊதிய உயர்வும் கொண்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படும் தேர்வாகும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய படிநிலைகளில் குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.

2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித் துறை), துணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

இத்தனை லட்சம் பேர் எழுதிய தேர்வா?

தேர்வுக்கு 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 1.60 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர். சென்னையில் 124 மையங்களில் 38,891 பேர் குரூப் 1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.  இதில் மொத்தம் 1,888 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 

முதன்மைத் தேர்வில் இருந்து தேர்வான நபர்களுக்கு, நேர்காணல் தேர்வு ஏப்ரல் ஆரம்பத்தில் நடைபெற்றது. குறிப்பாக ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய நேர்காணல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடந்த நிலையில் அன்றே குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின.

இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. தற்போது இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/RL_G1_04_2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலைக் காணலாம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola