குரூப் 1 தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான பணியிடங்கள், ஊதியம், தகுதி ஆகிய விவரங்களை கீழே காணலாம். 

Continues below advertisement

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப் I பணிகள்)- 2026 ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

Continues below advertisement

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (குரூப் 1 பணிகள்) க்கான அறிவிக்கை (23.06.2026) தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்

தேர்வர்கள் ஜூன் 30 முதல் 29.07.2026 பிற்பகல் வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.

தேர்வர்கள் https://tnpsc.gov.in/document/english/Group%20I%20Notification%202026_E.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு விவரங்களையும் பெறலாம். 

 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -1 (குரூப் 1 பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 06.09.2026 அன்று நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.