சென்னை சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லாக் கல்வியகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்வது எப்படி என்று பார்க்கலாம்.


 இது தொடர்பாக, மனிதநேய அறக்கட்டளை வெளியிட்ட செய்தி:


 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் - 1 தேர்விற்கான 90 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு 13.07.2024 அன்று நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நேற்று (02.09.2024) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


மனிதநேயத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்ற மனிதநேய மாணவர்கள் மட்டுமின்றி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இதர மாணவர்களும், மனிதநேய மையத்தில் முதன்மைத் தேர்விற்கான பயிற்சிக்கு பதிவு செய்தால் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


நேரடியாக வந்து பதிவு செய்ய முடியாத மாணவர்கள், எமது இணையதளமான www.mntfreeias.com-ல் பதிவு செய்து கொள்ளலாம். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற மனிதநேயம் மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள் அனைவரும் தொலைபேசி மூலமாக 044-24358373, 24330095, 9840439393 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.


அதேபோல இணைய தளத்தில் www.mntfreeias.com பதிவு செய்துகொள்ளலாம்.


மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…


தேர்வர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMHyx4SyWy2fsIcIm_l9scTFB_BreXsC15ZH3XaKD7qPpTUw/viewform என்ற இணைப்பில் பதிவு செய்துகொள்ளலாம்.



'மனிதநேயம்' அறக்கட்டளையால் நடத்தப்படும், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மத்திய - மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


 49 பேர் தேர்ச்சி

மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 49 மாணவ - மாணவிகள், குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வை எழுத உள்ளனர்.


பாடத்திட்டங்கள் பதிவேற்றம்



முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மனிதநேயம் கல்வியக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை https://tnpsc1.mntfreeias.com/mains-1/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயிற்சி பெறலாம்.