டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்கள்: 04/2025, நாள் 01.04.2025 மற்றும் 05/2025, நாள் 01.04.2025 வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- 1 (தொகுதி-1 பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IA (தொகுதி- IA பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 அன்று முற்பகல் நடைபெற்றது.
முதன்மைத் தேர்வு எப்போது?
இந்தத் தேர்விற்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) முறையே 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 வரை முற்பகலில் சென்னை மையங்களில் மட்டும் நடைபெற உள்ளது.
தேர்வுக்கூட தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே ஹால் டிக்கெட்டைப் பெற முடியும்.
https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பின் மூலம் குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
அதில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவலுக்கு: 1800 419 0958.