குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது. 

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் கீழ் வரும் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இன்றைக்கு அவர்களுக்கு நேர்காணல்கள் நடந்த நிலையில், அவர்கள் குறித்தான விவர பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. நேர்காணல்களின் முடிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 66 நபர்கள் பல்வேறு துறைகளின் கீழ் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். 

மேலும் விவரங்களுக்கு>> tnpsc.gov.in

Continues below advertisement

முன்னதாக, தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியாகின. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேர்வு செய்யப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. 

துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இதில் முதன்மைத் தேர்வுக்கு 3,704 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 29 வெளியாகின. இதில் 137 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

அவர்களுக்கு கடந்த 13,14 மற்றும் இன்று (ஜுலை 15) நேர்காணல்கள் நடந்தது. இந்த நேர்காணல்களின் முடிவில் தற்போது 66 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண