டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை ரத்துசெய்ய மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், விசாரணையை 6 மாதத்தில் முடிக்க ஆணை பிறப்பித்துள்ளது.

Continues below advertisement


2016ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள் மாற்றப்பட்டு, முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் ராம்குமார் என்பவர் கைதும் செய்யப்பட்டார். இந்த நிலையில், இதுகுறித்து கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ராம்குமாரின் கீழே கருணாநிதி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் தன்னைத் தவறாக வழக்கில் சேர்த்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான கீழமை நீதிமன்ற விசாரணையை ரத்து செய்யக் கோரி, வழக்கு தொடர்ந்தார். 


எனினும் இந்த விசாரணையை ரத்துசெய்ய மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் விசாரணையை முடிக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளது.