TNPSC Group 1, 1A: தேர்வர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- தேர்வு எப்போது?

TNPSC Group 1, 1A exam 2025: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 70 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்குக்கு இன்று (ஏப்ரல் 1) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தேர்வர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 70 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வின் முதல்நிலை மதிப்பீடு ஜூன் 15ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

என்னென்ன காலி இடங்கள்?

  • துணை ஆட்சியர்- 28
  • துணை காவல் கண்காணிப்பாளர்- 07
  • உதவி ஆணையர்- 19
  • ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் – 07
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 03
  • தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் - 06

தேர்வு முறை

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத் தேர்வு
  • நேர்காணல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு

முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரத்துக்கு நடைபெறும். முதன்மைத் தேர்வு 4 தனித்தனி தாள்களாக மொத்தம் 850 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இது விவரித்து எழுதும் வகையில் இருக்கும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைவோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்குக்கு இன்று (ஏப்ரல் 1) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தேர்வர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல மே 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 

மேலும் வயது வரம்பு, ஊதியம், கல்வி உள்ளிட்ட பிற தகுதிகள், விண்ணப்ப முறை உள்ளிட்ட்ட அனைத்து தகவல்களையும் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/Document/english/Grp%20I%20notification_English_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிக்கையை முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

குரூப் 1ஏ தேர்வு எப்போது?

அதேபோல குரூப் 1ஏ தேர்வு 2 பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான முதல்நிலைத் தேர்வும் ஜூன் 15ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

அதேபோல குரூப் 1ஏ தேர்வு பற்றிய அறிவிக்கையை https://www.tnpsc.gov.in/Document/english/Group%20IA%20Notification_English_.pdf என்ற இணைப்பு மூலம் பெறலாம்.

தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு

குரூப் 1 கேடரில் இதுவரை தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு குரூப் 1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, குரூப் 1 தேர்வுடன் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

Continues below advertisement
Sponsored Links by Taboola