ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 ஏ எழுத்துத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆகிய பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

காலி இடங்கள்- 15

ஊதிய விவரம்

ரூ.20,900 முதல் ரூ.75,900 வரை

கூடுதல் தகவல்களுக்கு:

தமிழ் மொழியில் அறிக்கை:26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf (tnpsc.gov.in)

ஆங்கில மொழியில் அறிக்கை 26_2022_CCSE_III_Notfn_Eng.pdf (tnpsc.gov.in) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குரூப் 3 ஏ எழுத்துத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதாவது:

''ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -III (குரூப் -III A) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு 28.01.2023 முற்பகலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், குரூப் 3 ஏ எழுத்துத் தேர்வு 38 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேற்படி எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்பொழுது பதினைந்து (15) மாவட்டத் தேர்வு மையங்களில் மட்டுமே, மேற்குறிப்பிட்ட தேர்வு நாளன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் இணைத்து குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே எழுத்துத் தேர்வு நடைபெறும். 

வ. எண் அறிவிக்கையில் குறிப்பிட்டிருந்த தேர்வு மையங்கள்  
மாற்றியமைக்கப்பட்ட தேர்வு மையங்களின் பெயர் மற்றும் தேர்வு மைய எண்
1.

சென்னை

சென்னை (0101)

 

2.

திருவள்ளூர்

 

சென்னை (0101)
3.

மதுரை

 

மதுரை (1001)

 

4.

தேனி

 

மதுரை (1001)
5.

விருதுநகர்.

 

மதுரை (1001)
6.

திண்டுக்கல்

 

மதுரை (1001)
7.

கடலூர்

 

கடலூர் (0301)
8.

விழுப்புரம்

கடலூர் (0301)
9.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் (0701)
10.

செங்கல்பட்டு

காஞ்சிபுரம் (0701)
11

நாகர்கோவில்

நாகர்கோவில் (0801)
12

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் (0201)
13

திருப்பூர்

 

கோயம்புத்தூர் (0201)
14

புதுக்கோட்டை

 

 

புதுக்கோட்டை (1501)
15 இராமநாதபுரம்

 

இராமநாதபுரம் (1601)

 


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.