TNPSC GROUP -4 FREE EXAM COCHING- குரூப் 4-க்கான தகுதி தேர்வுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தபட உள்ளது.


குரூப் 4-க்கான தகுதி தேர்வு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் (TNPSC ) தொகுதி–IV  போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு
ஜனவரி-2024 மாதத்தில் வெளியிடப்படுவதாகவும் மேற்படி தொகுதி – IV  பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜுன்-2024
மாதத்தில் நடைபெறும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆண்டு திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 4-க்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு 


இப்போட்டித் தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். VAO  பதவிகளுக்கு
குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சமாக 42 வயது SC , SC (A ),MBC ,BC ,BCM   ஆதரவற்ற விதவைகளுக்கும் 32 வயது மற்ற
பிரிவினருக்கும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 37 வயது SC ,SC (A) ஆதரவற்ற விதவைகளுக்கும் 34 வயது  MBC , BC, BCM பிரிவினருக்கும் 32 வயது மற்ற
பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட10 வகுப்பு கல்வித் தகுதிக்கு மேல் படித்தவர்களுக்கு (60 வயது வரை) வயது வரம்பில்லை.


குரூப்-4-க்கான இலவச பயிற்சி வகுப்பு


மேலும் இத்தேர்வு பற்றிய முழு விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக (03.01.2024) அன்று முதல் குரூப்-4-க்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடர்பு கொண்டும் அல்லது 04175-233381 என்ற தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரைப் பதிவு செய்தும் பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.