இனி யுபிஐ மூலம் ஒரு முறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களைச் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அப்போதில் இருந்தே தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிகள் சூடுபிடித்துள்ளன. தேர்வு குறித்த அறிவிக்கைகள், அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் ஆகியவை விரைவாக வெளியிடப்பட்டு வருகின்றன. 

அசத்தல் காட்டும் டிஎன்பிஎஸ்சி

தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அமைப்புக்கென அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வாட்ஸப் சேனல் மற்றும் டெலிகிராம் பக்கங்களும் தொடங்கப்பட்டு, அவ்வப்போது அப்டேட்டுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. 

Continues below advertisement

இந்த நிலையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டணத்தைச் செலுத்த யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி பெருமிதம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று கூறி உள்ளதாவது:

2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் (shortfall vacancies) நிரப்பப்பட்டுள்ளன.

கட்டணங்களை UPI மூலம் செலுத்தலாம்

ஒருமுறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, UPI மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.