ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-ல் உள்ள பதவிகளுக்கான நோடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டும் இன்று முதல் வரவேற்கப்படுகின்றன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
என்னென்ன பணியிடங்கள்?
இதில் உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), உதவி பொறியாளர் (அமைப்பியல்), உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்), இளநிலை மின் ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), கணினி மேலாளர், திட்ட அலுவலர், சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் 615 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நாள் மற்றும் நேரம்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வின் இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ள நிலையில், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 25.06.2025 இரவு 11.59 மணி ஆகும். விண்ணப்பத் திருத்தத்துக்கு ஜூன் 29 முதல் தேர்வு ஜூலை 1 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களது அனுமதி முற்றிலும் தற்காலிகமானதாகும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவது அல்லது தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாக தேர்வரின் பெயர் சேர்க்கப்படுவதால் மட்டுமே, ஒரு தேர்வர் பதவி நியமனம் பெற உரிமை அளிக்கப்பட்டவராக கருதப்பட மாட்டார்.
தேர்வு எப்போது?
தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ%3D%3D என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, பணி விவரங்கள், தேவையான ஆவணங்கள், பாடத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் https://tnpsc.gov.in/Document/tamil/CTS%20Non%20Interview%20%20Tamil_.pdf என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இதை க்ளிக் செய்து, தேர்வர்கள் முழு விவரங்களையும் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/ என்ற விவரங்களை க்ளிக் செய்து பெறலாம்.