டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு விடைத் தாள்களில் 22 பாடங்களுக்கான உத்தேச விடைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து மேலும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளதாவது:

’’ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயப் படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை எண்: 10/2025) நேரடி நியமனத்திற்கான தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 31.08.2025 அன்று மற்றும் 07.09.2025 முதல் 27.09.2025 வரை பல்வேறு நாட்களில் நடத்தப்பட்டன.

Continues below advertisement

ஓ.எம்.ஆர் (OMR) வகைத் தேர்வாக 31.08.2025 அன்று நடைபெற்ற தமிழ் தகுதித் தேர்வு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு பாடத்திற்கான வினாத்தாள் மற்றும் அதற்கான தோராய விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் 30.09.2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டு தேர்வர்களிடம் இருந்து முறையீடுகள் பெறப்பட்டன.

மேலும் 22 பாடங்களுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் 10.10.2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து எஞ்சிய கீழ்க்காணும் பாடங்களுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளமான https://www.tnpsc.gov.in ல் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

  1. Agriculture - வேளாண்மை
  1. Chemical Engineering and Technology வேதிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
  2. Civil Engineering-  அமைப்பியல் பொறியியல்
  1. Handloom Technology, Textile Technology and Textile Manufacture

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 24 பாடங்களின் உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  அதாவது இன்று முதல் (அக். 17) 24.10.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் முறையீடு செய்ய வேண்டும்.

எப்படி?

டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணைய தளத்தில் உள்ள தேர்வுப் பலகையின் (Exam Dashboard) கீழ் "Answer key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.

இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/