2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது என்பதற்கான உத்தேச ஆண்டு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


குரூப் 1 தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிக்கை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.


தொழில்நுட்பத் தேர்வு தேதிகள் என்னென்ன?


ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு (நேர்காணல் ) ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்றும் நேர்காணல் அல்லாத தேர்வுகள் ஆகஸ்ட் 4ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான டிப்ளமோ/ ஐடிஐ அளவிலான தேர்வுகள், ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.


குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிக்கை ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ளது. குரூப் VA தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.






காலிப் பணியிடங்கள் எப்போது அறிவிக்கப்படும்?


ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை அந்தத் தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.


முழு அட்டவணை இதோ!




குரூப் 4 தேர்வு பணியிடங்கள் அதிகரிப்பு


முன்னதாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி இடங்களோடு, புதிதாக 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8932 ஆக அதிகரித்தது. 


கூடுதல் தகவல்களுக்கு:  https://www.tnpsc.gov.in/