Simi Garewal - Tata : 'இந்த இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது' : ரத்தன் டாடாவின் முன்னாள் காதலி உருக்கம்

தொழிலதிபர் ரத்தன் டாடாவை காதலித்து பின் கடைசிவரை அவருடன் நெருங்கிய நட்புறவை பாராட்டி வந்தவர் நடிகை சிமி கரேவால். சிமி தற்போது ரத்தன் டாடாவின் இறப்பு பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

ரத்தன் டாடா

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நள்ளிரவு காலமானார். இந்திய தொழில்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் ரத்தன் டாடா. அவரது இறப்பு ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயல்பான சுபாவம் , மனித நேய செயற்பாடுகள் , விலங்குகளின் மீதான பிரியம் என அவரது பல்வேறு குணங்கள் மக்கள் வியந்து பார்க்கப்படுபவை.

Continues below advertisement

மேலும் சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கு ரத்தன் டாடா முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இனிமேலும் இருப்பார் . 

நொறுங்கிப்போன முன்னாள் காதலி சிமி

உலகமே வியந்து பார்க்கும் ரத்தன் டாடாவின் தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவரது வாழ்க்கையில் ஒரு சில காதலிகள் அவ்வப்போது அந்து போயிருக்கிறார்கள். ஆனால் தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை தனிமையிலேயே கழித்திருக்கிறார் அந்த மனிதன். ரத்தன் டாடா மற்றும் பாலிவுட் நடிகை சிமி கரேவால் சில காலம் காதலித்து பிரிந்தார்கள். காதல் உறவு முடிந்தாலும் கடைசிவரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். 

ரத்தன் டாடாவின் இறப்பு சிமி கரேவாலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய இழப்பு. அதனை வெளிப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் மிக உருக்கமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் சிமி. "இந்த இழப்பு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. போய் வா என் நண்பனே" என அவர் பதிவிட்டுள்ளார். 

ரத்தன் டாடா பற்றி பழைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் ”அவர் ஒரு சிறந்த மனிதர். நேர்மையானவர். பணம் எப்போதும் அவருக்கு முதன்மையான ஊக்க சக்தியாக  இருந்தது இல்லை. நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஒரு சிறந்த ஜென்டில்மேன் அவர். அவர் வெளிநாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் மன அமைதியோடு இருப்பதில்லை" என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola