தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வுகள், ஆசிரியர்கள் தேர்வுகளை முன்னிட்டு மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வு அலுவலர் தெரிவித்துள்ளார்.


தேதி மாற்றம்:


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் 11/02/2023 மற்றும் 12/02/2023 அன்று நடக்க இருந்த இறுதி பருவத்தேர்வுகள், தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) அதே தேதியில் நடக்கவிருப்பதால் அத்தேதியில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வருகிற 06/05/2023 மற்றும் 07/05/2023 தேதிகளுக்கு தள்ளிவக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்பதை அறிவிக்கலாகிறது.




தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரசினால் நிறுவப்பட்டுள்ள ஓர் பல்கலைக்கழகமாக செயல்பட்டுவருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடரவியலாத ,ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டதோடு பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் பட்டயப்படிப்பு, சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு என பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பயின்றுவருகின்றனர்.


இந்நிலையில், இப்பல்கலைகழக பருவ தேர்வுகளானது, 11/02/2023 மற்றும் 12/02/2023 அன்று நடக்க இருந்தது. ஆனால், அதே நாளில் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) அதே தேதியில் நடக்கவிருந்தது. 


அதையடுத்து, பல்வேறு தரப்பினரும், தேர்வு தேதிகளை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.