கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், பொதுப்பிரிவினருக்கு நாளை கலந்தாய்வு தொடங்குகிறது.

மாநிலம் முழுவதும் புதிதாகத் திறக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளையும் சேர்த்து, மொத்தம் 108 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன.இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு மே 7ஆம் தேதி 27ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கும், விண்ணப்பிக்கும் அவகாசம் மே 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றும் நாளையும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், நாளை (ஜூன் 4ஆம் தேதி) பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

விருப்பக் கல்லூரிகள் என்ன?

இந்த ஆண்டு விருப்பக் கல்லூரிகளில் முதல் 5 இடத்தை, சென்னை, கோவை மற்றும் திருச்சி கல்லூரிகள் பிடித்துள்ளன. முதல் அரசுக் கல்லூரியாக சென்னை பிரசிடென்சி கல்லூரி, கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மற்றும் திருச்சி பெரியார் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த 5 கல்லூரிகளுக்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

டாப் படிப்புகள் என்னென்ன?

இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவ மாணவிகள் பிஎஸ்சி கணினி அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்குப் பிறகு பிஏ தமிழ், காமர்ஸ் (பி.காம்.), பிஏ ஆங்கிலம், பிபிஏ ஆகிய படிப்புகள் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

வகுப்புகள் தொடங்குவது எப்போது?

மாணவர் சேர்க்கைப் பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 30ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

கலை மற்றும்‌ அறிவியல்‌ பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.inwww.tngasa.org என்ற இணையதள முகவரிகளில்‌ பெறலாம்‌.

முன்னதாக, https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரரின் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல், பிறந்த தேதி, தகுதித் தேர்வு ஆகியவற்றின் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு: www.tngasa.org