2023- 2024-ஆம்‌ ஆண்டுக்கான இரண்டாம்‌ ஆண்டு நேரடி மாணவர்‌ சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


தமிழக உயர் கல்வித் துறை அமைச்சா்‌ மற்றும உயர் கல்வித் துறை செயலாளர் அறிவுரையின்படியும் தொழில்நுட்பக்‌ கல்வித்‌ துறை இயக்குநரின்‌ வழிகாட்டுதலின்‌படியும் காரைக்குடி அழகப்பா செட்டியார்‌ அரசு பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரி ஒருங்கிணைந்து  இரண்டாம்‌ ஆண்டு நேரடி மாணவர்‌ சேர்க்கைக்கான துணை கலந்தாய்வை நடத்துகிறது‌. 


இந்த ஆண்டுக்கான பி.இ./ பி.டெக். நேரடி இரண்டாமாண்டு வகுப்புக்கான மாணவர் சேர்க்கைஒ பணிகள்‌ இணைய ‌(online) வழியில்‌ 01.06.2023 முதல்‌ தொடங்கி நடைபெற்று வருகின்றன.


தமிழக அரசரின்‌ தொழில்நுட்பக்‌ கல்வித்‌ துறையின்‌ மூலமாகச்‌ செயல்பட்டு வரும்‌ அரசு, அரசு உதவி பெறும்‌, தனியார் சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்கு 16,594 மாணவர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. அவர்களுள்‌ தகுதியுள்ள 15,300 மாணவர்களின் தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களது தரவரிசையும்‌ அவர்களுக்கான இணையதள கலந்தாய்வு விவரங்களும்‌ http://www.tnlea.com இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. 


இணையதளம்‌ வழியாக விண்ணப்பம் சமர்ப்பித்தல்  ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 அன்று நிறைவு பெற்றது. ஆகஸ்ட் 3 மற்றும் 4 அன்று சிறப்புக் கலந்தாய்வும்‌. 07.08.2023 முதல்‌ 19.08.2023 வரை போது கலந்தாய்வும்‌ இணையம் வாயிலாக நிறைவு பெற்றது. பின்னர்‌ பி.எஸ்சி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நடக்க உள்ளது.


பல்வேறு காரணங்களால்‌ விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள்‌ தற்பொழுது நடைபெற உள்ள துணைக் கலந்தாய்வு வாயிலாக விண்ணப்பிக்கலாம். துணைக் கலந்தாய்விற்கான விண்ணப்பப் பதிவு 19.08.2023 முதல்‌ 22.08.2023 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று 25.08.2023 அன்று துணை கலந்தாய்வு நடக்க உள்ளது.


பி.இ./பி.டெக்‌. இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் வீட்டில் இருந்தபடியே இணையதளம்‌ மூலம்‌ பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள்‌ நேரில்‌ சென்று கலந்தாய்வில்‌ பங்கேற்க தேவையில்லை.


மேலும்‌ ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள 2020ஆம்‌ ஆண்டு அறிவிப்பின்படி. டிப்ளமா எந்த பாடப்பிரிவில்‌ படித்திருந்தாலும்‌. இரண்டாமாண்டு நேரடி பொறியியல்‌ சேர்க்கையில தாங்கள்‌ விரும்பும் எந்தவொரு பாடப்பிரிவிலும்‌ சேர்க்கை பெறலாம்‌.


கலந்தாய்விற்கு  http://www.tnlea.com என்ற இணையதளத்தினை பார்வையிடலாம்‌.


இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னர்‌ அதற்கான ஆணையை பதிவிறக்கம்‌ (Download) செய்து தக்க கல்லூரயில்‌ அனைத்து சான்றிதழ்களையும்‌ (Original certificates) சமர்ப்பித்து சேர்ந்துகொள்ளலாம்‌. 


மேற்காணும்‌ விபரங்களை கல்லூரி முதல்வர் பழனி, ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌ கபாஸ்கரன்‌ (தொடர்பு- 09443661901). மற்றும்‌ முனைவா்‌  உமாராணி (தொடர்பு - 9843153330) ஆரியோர்‌ தெரிவித்தனர்‌.


துணை கலந்தாய்வு (Supplementary Counselling) கால அட்டவணை


ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி-  19.08.2023 to 22.08.2023
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate verification)-  23.08.2023
தரவரிசைப் பட்டியல் வெளியீடு (Publication of Rank List)- 24.08.2023
துன்ணைக் கலந்தாய்வு (Supplementary counselling) - 25.08.2023


சுமார் 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் துணை கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.