ஜூலை 1ஆம் தேதி பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை (TNEA-2026) தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:

Continues below advertisement

CBSE-யின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 21.06.2026 அன்று வெளிவந்த நிலையில் 29.06.2026-யில் வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும்.

குறைதீர்ப்பு காலமும் அறிவிப்பு

மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் அன்று அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு (Grievance Redressal) காலம் 01.07.2026 முதல் 05.07.2026 வரை வழங்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் மாணாக்கர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TFCs) நேரில் அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பொறியியல் சேர்க்கை படிநிலைகள்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 (TNEA 2026) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் பதிவைத் தொடங்கும் முன் வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்து கவனமாகப் படிக்க வேண்டியது முக்கியம்.

இணையவழி கலந்தாய்வு கட்டங்கள்

1. விண்ணப்பம் பதிவு செய்தல் மற்றும் அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல்2. சமவாய்ப்பு எண் (Random Number) உருவாக்குதல் (by TNEA Authority)3. பொறியியல் சேர்க்கை உதவிமையத்தில் இணையவழியாக சான்றிதழ் சரிபார்த்தல் (by TNEA Authority)4. தரவரிசை வெளியிடுதல் (by TNEA Authority)5. விருப்பமான கல்லுாரிகளையும் மற்றும் பாடப்பிரிவுகளையும் பதிவு செய்தல்6. குறிப்பிட்ட நாளில் தற்காலிக இடஒதுக்கீடு செய்தல் (by TNEA Authority)7. இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் (by Candidate)8. கல்லூரியிலோ அல்லது பொறியியல் சேர்க்கை உதவிமையத்திலோ(TFC) கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்தி உறுதி செய்தல்

விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள எல்லா விபரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும். 

தரவரிசை வெளியிடப்படுவதற்கு முன் CBSE வழியாக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் விவரங்களைப் பெற https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்