இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தினசரி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் மின்சார ஸ்கூட்டர்கள் பயன்பாட்டை மக்கள் அதிகளவு விரும்புகின்றனர். 

Continues below advertisement

iVOOMi Jeet X:

இந்தியாவில் நல்ல மைலேஜ் தரும் இ ஸ்கூட்டர்களுக்கு என்று நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில் அதிக மைலேஜ் தரும் iVOOMi நிறுவனத்தின் iVOOMi Jeet X இ ஸ்கூட்டர் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் iVOOMi Jeet X இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. Jeet X Standard - ரூபாய் 91 ஆயிரத்து 428

2. Jeet X ZE - 2.5 Kwh - ரூபாய் 96 ஆயிரத்து 529

3. Jeet X ZE - 3 Kwh - ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 831

170 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த 3 வேரியண்ட்களில் முதல் வேரியண்டில் 2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 61 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். 

2வது வேரியண்டில் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 61 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். கடைசி வேரியண்டில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 170 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சம் 61 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

சாம்பல், நீலம், சிவப்பு, வெண்சாம்பல் ஆகிய வண்ணங்களில் உள்ளது. 100 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. பிஎல்டிசி ஹப் மோட்டார் டைப் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லிபிளிட்டி வசதி உள்ளது. 

லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் டைப் ஆகும். சார்ஜர் அவுட்புட் 67வாட் ஆகும். பேட்டரி ஐபி ரேட்டிங் ஐபி 65 ஆகும். முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச், பின்பக்கம் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் அட்ஜஸ்டபிள் ஸ்ப்ரிங் லோடட் டெலிஸ்கோபிக் பொருத்தப்பட்டுள்ளது. 94 கிலோ எடை கொண்டது. 760 மி.மீட்டர் இருக்கை உயரம் பொருத்தப்பட்டுள்ளது. 180 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. 156 கிலோ எடை கொண்டது. 5 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி கொண்டது. 2 வருடம் மோட்டார் வாரண்டி உள்ளது.

டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால், எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. 

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. கீலெஸ் லாக், அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸடாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதியுடன் உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI