தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பொறியியல் கலந்தாய்வுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எந்தெந்தக் கல்லூரிகளில் சேர முடியும்?

தமிழகத்தில்‌ உள்ள அரசு, அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌, அண்ணா பல்கலைக்கழக வளாகப்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌, அண்ண பல்கலைக்கழக உறுப்பு பொறியியல்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைகழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ அரசு ஒதுக்கீடு இடங்களில்‌ சேர்வதற்கான கலந்தாய்வில்‌ கலந்து கொள்ள இணையதள வாயிலான விண்ணப்பப்‌ பதிவு 07.05.2025 முதல்‌ 06.06.2025 வரை நடைபெறும்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில்‌ மாணாக்கர்கள்‌ பயன்பெறும்‌ பொருட்டு கீழ்வரும்‌ அனைத்து விவரங்களும்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

  1. விண்ணப்பிக்கும்‌ முறை
  2. சான்றிதழ்கள்‌ பதிவேற்றும்‌ முறை (ஒலி, ஒளி வாயிலாக)
  3. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ கல்லூரி பாடப்பிரிவு மற்றும்‌ வகுப்பு வாரியாக மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்‌ ஆஃப்‌ மற்றும்‌ தரவரிசை விவரங்கள்‌.
  4. தமிழ்நாடு மாணாக்கர்‌ பொறியியல்‌ சேர்க்கை சேவை மையங்கள்‌ பற்றிய விவரங்கள்‌.

     5.சிறப்பு ஒதுக்கீட்டில்‌ சேர்வதற்கான சான்றிதழ்‌ மாதிரிகள்‌.

விண்ணப்பப்‌ பதிவு கட்டணம்‌ எவ்வளவு?

 OC/ BC/ BCM/ MBC& DNC பிரிவு மாணவர்களுக்கு - ரூ.500/

SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250/‌. இதுதவிர, கலந்தாய்வில்‌ கலந்து கொள்வதற்கான முன்‌ வைப்புத்‌ தொகையோ அல்லது கலந்தாய்வுக்‌கட்டணமோ எதுவும்‌ இல்லை.

அரசு பொறியியல்‌ மற்றும்‌ பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரி களில்‌ புதிய பாடபிரிவுகள்‌ தொடங்கப்பட்டுள்ளன.  * இதன்‌ மூலம்‌ அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ 720 மாணாக்கர்கள்‌ கூடுதலாக பயன்பெறுவர்‌ மற்றும்‌ 7.5 % அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ 54 மாணாக்கர்கள்‌கூடுலாக பயன்பெறுவர்‌.

இதே போன்று 13 அரசு பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில் (Government Polytechnic Colleges) 360 மாணாக்கர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 5 புதிய பாடப்பிரிவுகள்‌ தொடங்கப்பட்டுள்ளன.

இணைய வசதி இல்லையா? கவலை வேண்டாம்!

* இணையதள வசதி இல்லாத மாணாக்கர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌விண்ணப்பப்‌ பதிவு மற்றும்‌ கலந்தாய்வில்‌ கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும்‌ சென்ற ஆண்டைப்‌ போலவே 110 தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையங்கள்‌ நிறுவப்பட்டுள்ளன.

* மாணாக்கர்கள்‌ காலை 8 மணி முதல்‌ மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம்‌ தங்கள்‌ சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன்‌ கூடிய அழைப்பு மையம்‌ தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககத்தில்‌ அமைக்கப்பட்டுள்ளது.

இதன்‌ அழைப்பு எண்‌: 1800-425-0110.

* மேலும்‌, மாணாக்கர்கள்‌ tneacare@gmail.com என்ற மின்னஞ்சல்‌ வாயிலாக தங்கள்‌ சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்‌.

கூடுதல் தகவல்களுக்கு: www.tneaonline.org