TNEA Random Number 2023: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று (06.06.2023) வெளியிடப்படுள்ளது.


பொறியியல் கலந்தாய்வு:


தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகள்  மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் இளநிலைப் படிப்புகளில் மட்டும் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழிக் கலந்தாய்வு மூலம்  நிரப்பப்பட்டு வருகின்றன. 


2023 ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இது ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


1.86 லட்சம் பேர் விண்ணப்பம்:







ரேண்டம் எண் வெளியீடு:


தொடர்ந்து,  அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வருகிற 20-ந் தேதி வரை சரிபார்க்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 26-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் ஜூலை 2-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.


இந்த கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.06.2023) நிறைவடைந்தது. இதற்கு 2.28 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியாகியுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்கள் மூலம் தெரிந்துகொள்ளுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.