TN TRB Lecturer Recruitment: எஸ்சிஇஆர்டியில் உள்ள இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் உள்ளன.


தேர்வு முறை


கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.


கணினி மூலம் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு, விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள், முடியும் நாள், தேர்வு தேதி ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளன.




இட ஒதுக்கீடு


இந்தத் தேர்வுக்கு வழக்கம்போல 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதேபோல பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு, தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. 


வயது வரம்பு


விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு 31.07.2022 அன்று 57 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. 


தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகம்


முதல்முறையாக தமிழ் மொழி தகுதித் தேர்வு நடைமுறை அமல் படுத்தப்பட உள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர், தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி, தமிழ் தகுதித் தேர்வில் 30 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் உள்ள 50 மதிப்பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறவேண்டும். அப்போதுதான், பாடம் சார்ந்த முதன்மை விடைத்தாள் திருத்தப்படும்.


தேர்வுகள் என்ன மொழியில் நடத்தப்படும்?


  1. தமிழ் - தமிழ்
  2. ஆங்கிலம் - ஆங்கிலம்
  3. கணிதம் - தமிழ் & ஆங்கிலம்
  4. இயற்பியல் - தமிழ் & ஆங்கிலம்
  5. வேதியியல் - தமிழ் & ஆங்கிலம்
  6. தாவரவியல் - தமிழ் & ஆங்கிலம்
  7. விலங்கியல் - தமிழ் & ஆங்கிலம்
  8. வரலாறு - தமிழ் & ஆங்கிலம்
  9. புவியியல் - தமிழ் & ஆங்கிலம்
 10. உடற்கல்வி - தமிழ் & ஆங்கிலம்


விண்ணப்பக் கட்டணம்


OC/ BC/ BCM / MBC / DNC பிரிவினருக்கு- ரூ.500
SC/SCA/ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு - ரூ.250


ஆன்லைன் மூலமாகவே மட்டும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பிற வழியில் செலுத்தப்படும் கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 


இதுதொடர்பான முழுமையான தகவல்களை அறிய, கீழே உள்ள பிடிஎஃப்ஃபைப் பார்க்கவும்!