சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை (நவ.19) முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை (Website: http://www.trb.tn.gov.in) 19.11.2025 இன்று வெளியிடப்படுகின்றது.
என்ன தகுதி?
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணிபுரியும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்
மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 20.11.2025 முதல் 20.12.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்போது?
முதல் தாள் ஜனவரி 24ஆம் தேதியும் இரண்டாம் தாள் ஜனவரி 25ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தேர்வு முறை
150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு – ரூ.600
எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு – ரூ.300
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கூடுதல் தகவல்களுக்கு: http://www.trb.tn.gov.in