தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 1 மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 90.93 % மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3,61,454 மாணவர்களும், 4,15,389 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,76,844 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,06,413 மாணவ- மாணவிகள், அதாவது 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 93.15% மாணவர்கள் தேர்ச்சி.
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு 16,429 மாணவர்கள், 19,187 மாணவிகள் என 35,616 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில், மாணவர்கள் 14,729 பேர், மாணவிகள் 18,449 பேர் என மொத்தம் 33,178 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 89.65, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.15 ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.15% ஆகும். அரசு பள்ளிகளை பொறுத்தவரை 145 பள்ளிகளைச் சேர்ந்த 17,804 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில், 16,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.92 ஆக உள்ளது.
தேர்வு முடிவு:
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.gov.in, www.dge2.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவ, மாணவிகள் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கும் முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களில் (National Informatics Centres) தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
இவை அனைத்தையும் தவிர்த்து, அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்