தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 171 பள்ளிக் கல்வி இயக்ககத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 


கணித பாடத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக நல்லாசிரியர் விருது


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ( marakkanam ) அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் புனிதா அவர்களுக்கு என்பவருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கணித பாடத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக அரசு இவருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பயின்று வரும் புனிதா என்கின்ற பட்டதாரி ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுபெற உள்ளார்.


கணித பாடம் என்றாலே கசப்பா


இது குறித்து, பட்டதாரி ஆசிரியை புனிதா கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு கணித பாடம் என்றாலே கசப்பாக நினைத்துக் கொண்டு அதனை தவிர்த்து விடுகின்றனர். அதில் அதிமாக மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். அதனை சரி செய்யும் விதமாக 'தித்திக்கும் கணிதம்' என்ற நோக்கத்தோடு பள்ளி மாணவர்களை கணிதத்தில் தேர்ச்சி பெற வைக்க, அவர்களுக்கு எளிமையான முறையில் கணித வகுப்புகளை எடுத்து 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்து சாதனை செய்துள்ளார்.


'தித்திக்கும் கணிதம்'


மேலும் கணித பாடம் என்றாலே கதி கலங்கி நிற்கும் மாணவர்களை அரவணைத்து கணித பாடத்தில் முதன்மை மதிப்பெண் எடுப்பதற்கு வழிவகை செய்யும் விதமாக எளிமையான வழிமுறைகளை தெளிவுபடுத்தி அவர்களுக்கு கணிதத்தின் மீது ஆர்வத்தை கொண்டு வந்து அவர்களை வெற்றி பெற செய்துள்ளேன். மற்ற பள்ளி மாணவர்களும் கணிதப் பாடத்தை கஷ்டமாக எண்ணி விடாமல் அதனை சுலபமாக கற்றுக் கொள்ளும் விதமாக அவ்வப்போது வீடியோக்களை தயார் செய்து மற்ற பள்ளிகளுக்கு அனுப்பும் பணியிலும் மேற்கொண்டுள்ளார். 


தான் படித்த பள்ளியில் நல்லாசிரியர் விருது


வாக்கியத்தை மனப்பாடமாக கூறச் சொல்லுதல், எளிமையான கணக்குகள் கொடுத்தல், சிறு தேர்வுகள் மூலமாக பள்ளி மாணவர்களே மெருகேத்தி கணிதத்தில் வெற்றி பெற செய்து பல சாதனைகளை படைத்துள்ளார் பட்டதாரி ஆசிரியர் புனிதா. இவர் அதே பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை கல்வி பயின்றுள்ளார். தான் படித்த பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுபெறவது மிகவும் மகிச்சியாக உள்ளது.


எனக்கு கற்றுகொடுத்த ஆசிரியர்கள் முன்னிலையில் தற்போது நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவும், எனது ஆசிரியர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்கிறேன். மேலும் தொடந்து மாணவர்களுக்கு கணித பாடத்தின் மீதான அச்ச உணர்வை போக்கி அவர்களை வெற்றி பெற வைப்பதே எனது நோக்கம் ஆகும். என பட்டதாரி ஆசிரியை புனிதா கூறினார்.


ALSO READ | The Goat Twitter Review : தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்