புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வியை அரசியல் ஆக்கக்கூடாது என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Continues below advertisement


மேலும், ‘’உலக அளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.


நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்றும், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி உயர வேண்டும் என்றும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனவும் மத்திய அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும், பாஜக ஆளாத மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி உள்ளதால், தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பிரதான் வலியுறுத்தி உள்ளார்.