தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்து, 2 தேசிய விருதுகளை வென்ற நடிகராக இருக்கும் தனுஷ், ஒரு இயக்குனராகவும் அறிமுகமான திரைப்படமே பா.பாண்டி. 2017-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உன்னதமான காதல் படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதுவும் வயதான காலத்தில் தன்னுடைய காதலியை பார்க்க ஆசைப்படும் ஒருவர் பற்றி தான் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு, தன்னுடைய 50-ஆவது படத்தையும் நடிகர் தனுஷ் தான் இயக்கி நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த படத்தை இயக்கி முடித்த கையேடு தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்' இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
இவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யூசுவலான ஒரு காதல் கதையில் எண்டெர்டெயின்மெண்ட் காட்சிகளோடு கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்விட்டர் விமசனம் குறித்துபார்ப்போம்.