2023- 24ஆம்‌ ஆண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.‌


பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரியில் பட்டயப் படிப்பு மாணவர்கள்‌ சேர்க்கை குறித்து தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு அரசு அனைத்து பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும்‌, கீழ்க்கண்ட இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும்‌ முறை


மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவுசெய்ய வேண்டும்‌. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌ மாவட்ட சேவை மையங்கள்‌ (TNEA Facilitation Centre) மூலம்‌ விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.


இந்த மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த https://www.tnpoly.in/ என்ற இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.


கல்வித்‌ தகுதி என்ன?


* முதலாம் ஆண்டு பட்டயச்‌ சேர்க்கை (First Year Diploma Admission)


10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed)


* பகுதி நேர பட்டயச்‌ சேர்க்கை (Part time Diploma Admission) 


10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில்‌ பிரிவில்‌ பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology).அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்‌.


பதிவுக்கட்டணம்‌ 


பதிவுக்‌ கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர்‌ Debit Card  / Credit Card / Net Banking இணையதள வாயிலாகச் செலுத்த வேண்டும்‌. எஸ்சி/ எஸ்டி பிரிவினர்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டிய அவசியமில்லை.


முதலாம் ஆண்டு, பகுதி நேர பட்டயப்‌ படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய துவங்கும்‌ நாள்‌ - மே 20, 2023


முதலாம் ஆண்டு, பகுதி நேர  பட்டயப்‌ படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்‌ - ஜூன் 9, 2023


என்னென்ன ஆவணங்கள்?


12-ஆம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / ஐடிஐ மதிப்பெண்‌ சான்றிதழ்‌, சாதிச்‌ சான்றிதழ்‌, சிறப்பு பிரிவினர்‌ சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்‌ மற்றும்‌ விண்ணப்பதாரர்‌ புகைப்படம்‌ ஆகியவை தேவையான அளவுகளில்‌ இணையதளத்தில்‌ குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.


அனைத்து தகவல்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ தொலைபேசி எண்களை மாணவர்கள்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌.