கொரோனா பேரிடர் தமிழ்நாட்டில் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து வருகின்ற 4 அக்டோபர் 2021 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்ததை அடுத்து தற்போது இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தகுதிவாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் அரசின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
College Reopen: அக்.4ல் முதலாம் ஆண்டு கல்லூரிகள் திறப்பு! - கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!
ஐஷ்வர்யா சுதா | 30 Sep 2021 07:16 PM (IST)
அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
கல்லூரி