விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10533 பேரும் மாணவிகள் 11048 பேரும் ஆக மொத்தம் 21581 பேர் தேர்வு எழுதியதில் பெற்றுள்ளது. 95.11 சதவீதம் தேர்ச்சி விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 18 வது இடம் பெற்றுள்ளது. 

Continues below advertisement

12 ஆம் வகுப்பு தேர்வு: 8.21லட்சம் மாணவர்கள்

2024-2025 நிதியாண்டுக்கான  12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் .4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. 

விழுப்புரம் மாவட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

இன்று 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10533 பேரும் மாணவிகள் 11048 பேரும் ஆக மொத்தம் 21581 பேர் தேர்வு எழுதியதில் பெற்றுள்ளது. 95.11 சதவீதம் தேர்ச்சி விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 18 வது இடம் பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93.71 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் 11 வது இடம் பெற்றுள்ளது.

Continues below advertisement

மாநில அளவில் 18 வது இடம்

அரசு பள்ளி /ஆதிதிராவிட பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு நிதியுதவி பெறும் பள்ளி / மெட்ரிக் பள்ளிகளில் 52 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஆக விழுப்புரம் மாவட்டத்தில் 87 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சென்ற 2023-2024 ஆம் கல்வியாண்டில் 93.17 சதவீதம் பெற்று விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 27 வது இடத்தில் இருந்து தற்போது 1.94 சதவீதம் உயர்ந்து 95.11 சதவீதம் பெற்று மாநில அளவில் 18 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மாநில அளவில் 20 -வது இடத்தில் இருந்து தற்போது 11வது இடத்திற்கு முன்னேற்றம்

சென்ற 2023-2024 கல்வியாண்டில் 91.30 சதவீதம் பெற்று விழுப்புரம் மாவட்டம் அரசுப்பள்ளிகளில் மாநில அளவில் 20 -வது இடத்தில் இருந்து தற்போது 2.41 சதவீதம் உயர்ந்து 93.71 அளவில் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சதவீதம் பெற்று மாநில விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் தினந்தோறும் பள்ளிக்கல்வித் துறைக்கு அவர் எடுத்த நடவடிக்கைகள், தலைமை ஆசிரியர்களுக்கு அவ்வப்போது கூட்டம் நடத்தி அவர் அறிவுரைகளை வழங்கிய நடைமுறைப்படுத்தியமையால் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்திட காரணமாக அமைந்தது.

தேர்ச்சி சதவீதம் உயர்ந்தமைக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கற்பித்தல் பணி,காலை, மாலை சிறப்பு வகுப்புகள், வாரத்துக்கு ஒரு முறை குறுந்தேர்வுகள், மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சி அளித்தது, தேர்வுகள் பல வைத்து பயிற்சி அளித்ததும், பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைத்ததும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த ஆண்டும் மிஸ் செய்த மாணவர்கள்:

வழக்கமாக இந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளை அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் தேர்வெழுதிய  மாணவியர்களின் எண்ணிக்கை 4,19,316 ஆகும். அதே போல மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178. இதில் 4,05,472 (96.70 %) தேர்ச்சி மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவரகளை விட மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் டாப் 5

 முதல் மாவட்டம் - அரியலூர் 98.82%

 இரண்டாவது மாவட்டம் - ஈரோடு 97.98%

மூன்றாவது மாவட்டம் திருப்பூர் 97.53%

நான்காவது மாவட்டம் கோவை-  97.48%

ஐந்தாவது மாவட்டம் கன்னியாகுமரி-97.01%