TN 12th Results 2025 District Wise: மாநில கல்வி வாரியத்தின் கீழ் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகள் சதவிகிதமும், தனியார் பள்ளிகள் சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பாண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதமும் பலரையும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எந்த மாவட்டம் முதலிடம்?
மாநிலத்திலேயே அதிகபட்சமாக அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 98.82 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 97.98 சதவிகிதமும், திருப்பூர் மாவட்டத்தில் 97.53 சதவிகிதமும், கோயம்பத்தூர் மாவட்டத்தில் 97.48 சதவிகிதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 97.01 சதவிகிதமும் தேர்ச்சி பதிவாகியுள்ளது. மாநில அளவில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்களில், 3 மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்:
| மாவட்டம் | தேர்ச்சி விகிதம் |
| சென்னை | 94.44% |
| செங்கல்பட்டு | 94.29% |
| காஞ்சிபுரம் | 93.27% |
| திருவள்ளூர் | 91.49% |
| கடலூர் | 96.06% |
| விழுப்புரம் | 95.11% |
| திருவண்ணாமலை | 93.64% |
| அரியலூர் | 98.82% |
| பெரம்பலூர் | 96.58% |
| கள்ளக்குறிச்சி | 90.96% |
| திருவாரூர் | 94.35% |
| தஞ்சாவூர் | 95.80% |
| மயிலாடுதுறை | 93.25% |
| நாகப்பட்டினம் | 96.03% |
| திருப்பத்தூர் | 94.31 % |
| வேலூர் | 90.79 % |
| திருச்சி | 95.83% |
| கரூர் | 93.66% |
| புதுக்கோட்டை | 92.55% |
| தர்மபுரி | 95.25% |
| கிருஷ்ணகிரி | 94.83% |
| சேலம் | 94.32% |
| ஊட்டி | 93.979% |
| திருநெல்வேலி | 95.53% |
| தென்காசி | 94.70% |
| ராமநாதபுரம் | 94.96% |
| தேனி | 94.43% |
| மதுரை | 95.74% |
| திண்டுக்கல் | 94.90% |
| கோயம்புத்தூர் | 97.48% |
| திருப்பூர் | 97.53% |
| தூத்துக்குடி | 96.19% |
| கன்னியாகுமரி | 97.01% |
| விருதுநகர் | 96.64% |
| நாமக்கல் | 95.67% |
| சிவகங்கை | 96.71 % |
| ஈரோடு | 97.98% |
| ராணிப்பேட்டை | 92.78% |
| காரைக்கால் | 98.12 |
| புதுச்சேரி | 98.57 |
2024ம் ஆண்டு மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்:
முன்னதாக கடந்த 2024ம் ஆண்டில் 7.60 லட்சம் பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 94.56 சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருந்தனர். 2 ஆயிரத்து 478 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பதிவு செய்தன. மாவட்ட வாரியாக 97.45 சதவிகித தேர்ச்சியுடன், மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்தது. அதைதொடர்ந்து, சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் 97.42 சதவிகித தேர்ச்சியையும், அரியலூர் மாவட்டம் 97.25 சதவிகித தேர்ச்சியையும் பதிவு செய்து அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.