12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை மாணவர்கள் முந்தினார்களா இல்லையா  என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

Continues below advertisement


12 ஆம் வகுப்பு தேர்வு: 8.21லட்சம் மாணவர்கள்


2024-2025 நிதியாண்டுக்கான  12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்டல் .4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. 


வெளியான முடிவுகள்: 


இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மொத்தம் இந்த ஆண்டு   8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில்  தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494 இதில் மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316, மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178


தேர்ச்சி விவரங்கள்



  • தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)

  • தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049

  • கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.47% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.


இந்த ஆண்டும் மிஸ் செய்த மாணவர்கள்:


வழக்கமாக இந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளை அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் தேர்வெழுதிய  மாணவியர்களின் எண்ணிக்கை 4,19,316 ஆகும். அதே போல மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178. இதில் 4,05,472 (96.70 %) தேர்ச்சி மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவரகளை விட மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


சென்ற ஆண்டு எவ்வளவு:


கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7,60,606 பேர் எழுதிய நிலையில் மொத்தம் 7,19,196 மாணவ தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீகிதம் 94.56 சதவீகிதம் ஆகும்.


100% தேர்ச்சி:


மொத்தம் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7,513 இதில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -2,638. அதே போல 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 436.


அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் டாப் 5


 முதல் மாவட்டம் - அரியலூர் 98.82%


 இரண்டாவது மாவட்டம் - ஈரோடு 97.98%


மூன்றாவது மாவட்டம் திருப்பூர் 97.53%


நான்காவது மாவட்டம் கோவை-  97.48%


ஐந்தாவது மாவட்டம் கன்னியாகுமரி-97.01%