TN 12th Result 2025: தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் 95.80 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13-வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட 2.34 சதவீதம் கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 104 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ,  மாணவிகளில் 93.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

Continues below advertisement

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 553 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 25 ஆயிரத்து 438 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.80 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 2.34 சதவீதம் கூடுதல். இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 307 மாணவர்களில் 11 ஆயிரத்து 584 பேரும், 14 ஆயிரத்து 246 மாணவிகளில் 13 ஆயிரத்து 854 பேரும் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 104 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ,  மாணவிகளில் 93.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம், அரசு பள்ளிகளில் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 12 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

மாவட்டத்தில் மொத்தம் 65 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசு பள்ளிகள் 14 என்பது குறிப்பிடத்தக்கது.